Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'எந்தச் சூழ்நிலையிலும் நோன்புப் பெருநாளின் அர்த்தமும் உற்சாகமும் மாறுவதில்லை': அதிபர் ஹலிமா

இவ்வாண்டு நோன்புப் பெருநாளுக்கு அன்புக்குரியவர்களை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் பண்டிகையின் அர்த்தமும் வழக்கமான உற்சாகமும் மாறுவதில்லை என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
'எந்தச் சூழ்நிலையிலும் நோன்புப் பெருநாளின் அர்த்தமும் உற்சாகமும் மாறுவதில்லை': அதிபர் ஹலிமா

(படம்: Facebook/Halimah Yacob)

இவ்வாண்டு நோன்புப் பெருநாளுக்கு அன்புக்குரியவர்களை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் பண்டிகையின் அர்த்தமும் வழக்கமான உற்சாகமும் மாறுவதில்லை என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

Facebook வழியாகத் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டார்.

இம்முறை நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் வித்தியாசமாக இருக்கும் என்று கூறிய அவர் ஆண்டுதோறும் தம் வீட்டில் கூடும் உற்றார், உறவினர்களை இவ்வாண்டு பிரிந்திருக்க வேண்டியுள்ளதாகக் கூறினார்.

பண்டிகைக் காலத்தில் முஸ்லிம் குடும்பங்கள் ஒன்றுகூட முடியாத சிரமத்தைத் தம்மால் புரிந்துகொள்ளமுடிவதாக அவர் சொன்னார்.

முஸ்லிம்கள் நோன்பு வைத்து தங்கள் சமயக் கடமைகளைச் செய்வது மட்டுமல்லாமல், சமூகத்தில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சிங்கப்பூரர்களாகத் தங்கள் கடமையை ஆற்றியுள்ளதாக அதிபர் கூறினார்.

பலர் இணையம்வழி உறவினர்களைச் இவ்வாண்டு சந்திக்கின்றனர்; ஜூன் முதல் தேதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரும் கவனத்துடன் நடந்துகொள்ளுமாறு அவர் அறிவிறுத்தினார்.

கிருமித்தொற்றின் காரணமாக இவ்வாண்டு நோன்புப் பெருநாளுக்கு இஸ்தானா திறக்கப்படாது என்பதையும் சுட்டினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்