Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிபர் ஹலிமா, பிரதமர் லீயுடன் விருந்துக்கு அழைக்கும் போலி மின்னஞ்சல்

அதிபர் ஹலிமா யாக்கோப், ஒரு போலி மின்னஞ்சல் குறித்துக் காவல்துறையிடம் புகாரளித்துள்ளார்.

வாசிப்புநேரம் -


அதிபர் ஹலிமா யாக்கோப், ஒரு போலி மின்னஞ்சல் குறித்துக் காவல்துறையிடம் புகாரளித்துள்ளார்.

அதிபருடனும், பிரதமர் லீ சியென் லூங், அமைச்சர்கள் ஆகியோருடனும் அடுத்த மாதம் 10ஆம் தேதி விருந்துக்கு வரும்படி அந்த மின்னஞ்சலில் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

அது மோசடியான மின்னஞ்சல் என்று அதிபர் தமது Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

போலி மின்னஞ்சலில் Sharepoint எனும் தளத்தின் வழி அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படும்.

அவரவர் மின்னஞ்சல் மறைச்சொல்லை உள்ளிடும்படியும் அது கேட்கும்.

இணைய மோசடிகள் பற்றி விழிப்புடன் இருக்கும்படி அதிபர் சிங்கப்பூரர்கள் அனைவரையும் வலியுறுத்தியுள்ளார்.

மோசடி மின்னஞ்சல்கள் பற்றித் தெரிந்துவைத்திருப்பதன் மூலம் அத்தகைய ஏமாற்றுவேலைகளிலிருந்து தப்பிக்கலாம் என்று திருவாட்டி ஹலிமா கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்