Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் F1 இரவுக் கார்ப்பந்தயம்: சாதிப்பாரா ஹாமில்ட்டன்?

சிங்கப்பூர் F1 இரவுக் கார்ப்பந்தயம் இந்த வார இறுதியில் நடக்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் F1 இரவுக் கார்ப்பந்தயம் இந்த வார இறுதியில் நடக்கவிருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வெற்றிகண்ட மெர்ஸேடிசின் (Mercedes) லூயிஸ் ஹாமில்ட்டன் (Lewis Hamilton) இந்த முறையும் சாதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிங்கப்பூர்ப் பந்தயங்கள் எப்போதும் சவால்மிக்கவை. அதன் பந்தயத் தடத்தில் 23 வளைவுகள் உள்ளன. அது மற்ற பந்தயத்தடத்தை விட அதிகம்.

இந்த முறை ஹாமில்ட்டன் சிங்கப்பூரில் வெற்றிபெற்றால் அவர் ஐந்தாவது முறையாக சிங்கப்பூரில் வெற்றி கண்டதாக இருக்கும்.

இதுவரை யாரும் சிங்கப்பூரில் 5 முறை வென்றதில்லை.

சிங்கப்பூரில் ஃபெராரியின் (Ferrari) செபாஸ்டியன் வெட்டலும் (Sebastian Vettel) ஹாமில்ட்டனும் தலா 4 முறை வென்றுள்ளனர்.

இந்தப் பருவத்திற்கான புள்ளிப் பட்டியலில் ஹாமில்ட்டன் முதலிடத்தில் உள்ளார்.




 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்