Images
  • amster
    (படம்: Hamster Society Singapore / Facebook)

பதுக்கி வைத்திருந்த 129 வெள்ளெலிகளை ஒப்படைத்த பெண்

பெண் ஒருவர், தான் பதுக்கி வைத்திருந்த 129 வெள்ளெலிகளை ஒப்படைத்திருப்பதாகச் சிங்கப்பூர் வெள்ளெலிச் சங்கம் (Hamster Society Singapore) தெரிவித்துள்ளது.

அவற்றில் பல நோய்வாய்ப்பட்டிருப்பதாக அது தனது Facebook பக்கத்தில் பதிவு செய்துள்ளது.


பராமரிப்பு இல்லாததாலும் பிரித்து வைக்கப்படாததாலும் அவற்றில் பல, பிள்ளை பெற்றிருப்பதாக அது குறிப்பிட்டது.

பொருள்களையோ செல்லப் பிராணிகளையோ குவித்து வைப்பது என்பது மருத்துவ ரீதியான ஒரு மனநோய்.

வெள்ளெலிகளை எப்படிப் பராமரிக்கவேண்டும் என்பது அவற்றை ஒப்படைத்தவருக்குத் தெரியவில்லை என்று சங்கம் கூறியது.

அவர் தனிமையில் வாடுவதாகவும் அவருக்குத் தேவையான ஆதரவை அளித்து வருவதாகவும் அது தெரிவித்தது.  

Top