Images
  • hand shake ph
    (படம்: AFP )

கைகுலுக்கு - அவ்வளவு முக்கியத்துவம் ஏன்?

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் இன்று காலை (12 ஜூன்) சந்தித்தபோது, முதலில் கைகுலுக்கிக் கொண்டனர். அந்தப் படம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஊடகங்களில் இடம்பிடித்தது.

கைகுலுக்குவதில் என்ன இருக்கிறது? அதற்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் என்று நீங்கள் நினைக்கலாம். கைகுலுக்குவதில் பல வகை உள்ளது. ஆனால் அரசியலில் அதற்குத் தனியிடம் உண்டு.
அது குறித்து ஆய்வாளர்கள் கூறுவது:

- கைகுலுக்குவது பல அர்த்தங்கள் பொதிந்த ஒரு நடவடிக்கை

- பொதுவாக, கைகுலுக்குவது ஓர் அன்றாட நடவடிக்கை போல் தோன்றலாம்; ஆனால் பகை கொண்ட இருவருக்கு இடையே நிகழும்போது, அதில் ஆழமான அர்த்தம் உள்ளது.

-மாற்றுக் கருத்துக் கொண்ட இருவர் கைகுலுக்கிய பின் அவர்களது பேச்சு அமைதிக்கு வழிவிட்டாலும், சுமுகமாக முடியாவிட்டாலும், மனத்தில் நிற்பது என்னவோ கைகுலுக்கு மட்டுமே.

--கைகுலுக்குவது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இருதரப்பு இணக்க அடையாளம். அது மொழி வரையறைகளைக் கடந்தது.

-- இணைக்க,  ஒப்பந்தத்துக்கு வழிவகுக்க, அமைதிக்கு வழிவிடத் தேவையான சக்தி கைகுலுக்கும் செயலுக்கு இருக்கிறது.

--பெரிய உரையின் மூலம் தெரிவிக்க வேண்டிய கருத்தை ஒரு கைகுலுக்கு உணர்த்திவிடும்.

--மக்களை இணைக்கும் மிகப்பெரிய சக்தி கைகுலுக்குக்கு உண்டு.

இப்போது தெரிகிறதா? தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வது எவ்வளவு முக்கியமான செயல் என்று! 

Top