Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தீமிதித் திருவிழாவில் பங்கேற்க முடிவதில் மகிழ்ச்சி-ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்கள்

சௌத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நாளை நடைபெறவிருக்கும் தீமிதித் திருவிழாவில் கலந்துகொள்ள பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -

(நிருபர்: ஆர்த்தி சிவராஜன்)

சௌத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நாளை நடைபெறவிருக்கும் தீமிதித் திருவிழாவில் கலந்துகொள்ள பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இவ்வாண்டுத் தீமிதித் திருவிழாவில் முன்பதிவு செய்த 950 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

கடந்த ஆண்டு திருவிழாவில் மக்கள் பங்கேற்க முடியாததால், இவ்வாண்டு அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை இந்து அறக்கட்டளை வாரியம் இயன்றவரை செய்திருக்கிறது.

முன்பு கோயிலுக்கு நேரடியாகச் சென்று, சீட்டை வாங்கும் நடைமுறை இருந்தது.

தற்போது இணையம்வழியே பதிவுசெய்யும் நடைமுறை இருந்தாலும் தீமிதித் திருவிழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் திரு. அருள் குமரன் கோவின் சொன்னார்.

தவிர்க்கமுடியாத சிறுசிறு சிரமங்கள் இருந்தாலும் அதைப் பொறுத்துக்கொள்ளத் தயாராக இருப்பதாகச் சொன்னார், தீமிதித் திருவிழாவில் பங்கேற்கவிருக்கும் திரு. கார்த்திகேயன்.

இருப்பினும், இவ்வாண்டு தீமிதித் திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்வதைச் சாத்தியமாகியுள்ளது. இந்து அறக்கட்டளை வாரியத்திற்கும் மாரியம்மன் கோவிலுக்கும் எங்களின் நன்றிகள்.

அது பற்றிய விரிவான தொகுப்பை, இன்றிரவு தொலைக்காட்சி செய்தியில் பார்க்கலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்