Images
  • Ga
    ( படம்: St Gabriel's Primary School )

உணவங்காடிக் கலாசாரத்திற்குச் சமூகத்தின் ஆதரவைத் திரட்டும் செயிண்ட் கேபிரியல் தொடக்கப்பள்ளி மாணவர்கள்

சிங்கப்பூர் உணவங்காடிக் கலாசாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க 'Our SG Hawker Culture' எனும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தக் கண்காட்சி முதன்முதலாக தியோங் பாரு சந்தையில் கடந்த மாதம் 25ஆம் தேதி அறிமுகம் கண்டது.

சிங்கப்பூரின் உணவங்காடிக் கலாசாரம் , UNESCO பட்டியலில் நியமனம் பெறுவதற்காக சிங்கப்பூர் எடுத்துவரும் நடவடிக்கைகள் முதலியவற்றை அந்தக் கண்காட்சி விளக்கும்.

சிங்கப்பூரின் உணவங்காடிக் கலாசாரம் UNESCO-வின் தொட்டுணர முடியாத கலாசாரப் பட்டியலில் நியமனம் பெறுவதற்கான ஆதரவைத் தெரிவித்த முதல் பள்ளி செயிண்ட் கேபிரியல் தொடக்கப்பள்ளி.

அடுத்த முன்று மாதங்களுக்கு நடமாடும் கண்காட்சி தீவு முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களுக்குச் செல்லவுள்ளது.

உணவங்காடி நிலையங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நூலகங்கள், கடைத்தொகுதிகள், சமூக மையங்கள் ஆகிய இடங்களுக்கு நடமாடும் கண்காட்சி செல்லும்.  

Top