Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

5 பேர் கொண்ட குழுக்களாக மேலும் அதிகமான உணவங்காடி நிலையங்களில் அமர்ந்து சாப்பிடலாம்

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், 5 பேர் கொண்ட குழுக்களாக மேலும் அதிகமான உணவங்காடி நிலையங்களில் அமர்ந்து உணவு உட்கொள்ளலாம்.

வாசிப்புநேரம் -
5 பேர் கொண்ட குழுக்களாக மேலும் அதிகமான உணவங்காடி நிலையங்களில் அமர்ந்து சாப்பிடலாம்

(படம்: Ooi Boon Keong/TODAY)

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், 5 பேர் கொண்ட குழுக்களாக மேலும் அதிகமான உணவங்காடி நிலையங்களில் அமர்ந்து உணவு உட்கொள்ளலாம்.

அது குறித்து தேசியச் சுற்றுப்புற அமைப்பின் இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டது.

5 பேர் கொண்ட குழுக்களாகச் சாப்பிடக்கூடிய உணவங்காடி நிலையங்களின் பட்டியலில் ஏற்கெனவே மேலும் இரண்டு இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

- புளோக் 137, தெம்பனிஸ் ஸ்டிரீட் 11-இல் (Blk 137 Tampines Street 11) உள்ள உணவங்காடி நிலையம்
- தாமான் ஜூரோங் உணவங்காடி நிலையம் (Taman Jurong Food Centre)

பட்டியலில் தற்போது மொத்தம் 13 உணவங்காடி நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

17 காப்பிக் கடைகளில் அமர்ந்து சாப்பிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஏமி கோர் (Amy Khor) நேற்று தமது Facebook பக்கத்தில் பதிவிட்டார்.

இதற்கு முன்னர் அந்த நடைமுறை 7 காப்பிக் கடைகளில் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், 5 பேர் வரை சாப்பிடக்கூடிய நடைமுறை, வரும் திங்கட்கிழமைக்குள் (29 நவம்பர்) மேலும் 19 உணவங்காடி நிலையங்களில் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

உணவங்காடி நிலையங்களில் Maxwell Food Centre, Chomp Chomp Food Centre ஆகியவையும் அடங்கும்.

உணவங்காடி நிலையங்களில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை அடையாளம் காண, அவர்களுக்கு ஒட்டுவில்லைகள் கொடுக்கப்படும்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உணவை வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

வரும் செவ்வாய்க்கிழமைக்குள் (30 நவம்பர்) எஞ்சிய உணவங்காடி நிலையங்களும் பட்டியலில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்பட்டது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்