Images
உணவங்காடித் தொழிலைப் புதியவர்களுக்கு மாற்றிவிடுவதற்கு உதவும் புதிய திட்டம்
சிங்கப்பூரில், உணவங்காடித் தொழிலை நீண்ட காலத்துக்கு ஏற்று நடத்தியோர் வர்த்தகத்தைப் புதியவர்களுக்கு மாற்றிவிடும் திட்டம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் காணவுள்ளது.
அது குறித்த மேல விவரம் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார்.
உணவங்காடித் தொழிலில் இருந்து ஓய்வுபெற விரும்பும் சிலர், தங்களுடைய தொழிலை எடுத்து நடத்துவோரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கலாம்.
அவர்களுக்குத் திட்டம் கைகொடுக்கும்.
தொழிலில் அனுபவம் பெற்றவர்களையும் தொழிலைக் கற்க ஆர்வம் காட்டுவோரையும் இணைக்க அது உதவும்.
குறைந்தது 15 ஆண்டு அனுபவமுடைய உணவங்காடிக்காரர்கள், புதிய திட்டத்தின் மூலம் பலனடைவர்.
அத்தகைய சுமார் 900 உணவுக் கடைக்காரர்கள் தற்போது இருப்பதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு குறிப்பிட்டது.