Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

5,400 உணவங்காடிக் கடைக்காரர்கள் மின்னிலக்கக் கட்டண முறைக்கு மாறியுள்ளனர்

வாடிக்கையாளர்கள் குறைந்தது 5,400 உணவங்காடிக் கடைகளில் இனி மின்னிலக்கக் கட்டண முறை மூலம் பணம் செலுத்த முடியும்.

வாசிப்புநேரம் -
5,400 உணவங்காடிக் கடைக்காரர்கள் மின்னிலக்கக் கட்டண முறைக்கு மாறியுள்ளனர்

(கோப்புப்படம்: Nuria Ling/TODAY)

வாடிக்கையாளர்கள் குறைந்தது 5,400 உணவங்காடிக் கடைகளில் இனி மின்னிலக்கக் கட்டண முறை மூலம் பணம் செலுத்த முடியும்.

'Hawkers Go Digital' எனும் மின்னிலக்கத் திட்டத்தின் ஓர் அங்கமாக உணங்காடிக் கடைக்காரர்கள் மின்னிலக்கப் பணமாற்றுச் சேவைகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர்.

அந்தத் திட்டத்தைத் தகவல்-தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் ஜூன் மாதம் அறிமுகம் செய்தது.

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 18,000 உணவங்காடிக் கடைகளை மின்னிலக்கக் கட்டண முறைக்கு மாற்ற ஆணையம் இலக்குக் கொண்டுள்ளது.

"இரண்டு மாதங்களில் 30 விழுக்காட்டு உணவங்காடிக் கடைகள் மின்னிலக்கக் கட்டண முறையை நடைமுறைப்படுத்தியுள்ளன. அது வரவேற்கத்தக்கது. மின்னிலக்க முறையில் கட்டணம் செலுத்த வாடிக்கையாளர்களின் ஆதரவும் இருக்கிறது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது."

என்று தகவல், தொடர்பு அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.

தோ பாயோ லோரோங் 8-இல் உள்ள உணவங்காடி நிலையம், ஈரச்சந்தையைப் பார்வையிடச் சென்றபோது திரு.ஈஸ்வரன் அவ்வாறு கூறினார்.

மின்னிலக்கக் கட்டண முறையைக் கடைப்பிடித்து வரும் 10-இல் 6 உணவங்காடிக் கடைக்காரர்கள் ஊக்கத்தொகைக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

அதற்குத் தகுதிபெற, ஒரு மாதத்தில் குறைந்தது 20 மின்னிலக்கப் பரிவர்த்தனையைச் செய்திருக்கவேண்டும்; ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் செலுத்தப்பட்ட தொகை 1 வெள்ளிக்கும் அதிகமாக இருக்கவேண்டும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்