Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இளையர்களை உணவங்காடித் துறைக்கு ஈர்க்கும் திட்டம்- 10 பேர் கடைகளுக்கு விண்ணப்பம்

உணவங்காடி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயிற்சிகளை முடித்த 10 பங்கேற்பாளர்கள், புதிய கடைகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

உணவங்காடி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயிற்சிகளை முடித்த 10 பங்கேற்பாளர்கள், புதிய கடைகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இளையர்களை உணவங்காடித் துறைக்கு ஈர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட மூன்று கட்டத் திட்டத்தின் இறுதிக் கட்டம் அது.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்கான மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் (Amy Khor) அது குறித்த விவரங்களை Facebook-இல் பகிர்ந்துகொண்டார்.

திட்டத்தை முழுமையாக முடித்த 3 உணவங்காடிக்காரர்களை இந்த வாரம் சந்தித்ததாக அவர் குறிப்பிட்டார்.

புதிய கடைகளுக்குப் பதிவுசெய்துள்ள அந்த 10 பங்கேற்பாளர்களும் கூடிய விரைவில், உணவை ருசி பார்க்கும் தேர்வு, வர்த்தகத் திட்டங்கள் குறித்த நேர்காணல் ஆகியவற்றுக்குச் செல்வர் என்றார் டாக்டர் கோர்.

அவை அனைத்தையும் வெற்றிகரமாக முடித்தால், சராசரியாக 40 விழுக்காடு வாடகைக் கழிவும், 15 மாதங்களுக்குச் சமைக்கும் வசதிகள் பொறுத்தப்பட்ட கடைகளும் அவர்களுக்கு வழங்கப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்