Images
  • haze singapore (1)

சுமத்ரா காட்டுத் தீச் சம்பவங்கள் தொடர்ந்தால் சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படலாம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இந்தோனேசியாவின் சுமத்ரா காட்டுத் தீச் சம்பவங்கள் தொடர்ந்தால், சிங்கப்பூரில் லேசான புகைமூட்டம் ஏற்படலாம் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு கூறியுள்ளது.

சுமத்ராவில் சுமார் 380 காட்டுத் தீச் சம்பவங்கள் பதிவானதை அமைப்பு சுட்டியது.

புகைமூட்டம் மலாக்கா நீரிணையைக் கடந்து மலேசியாவின் மேற்குப் பகுதிகளைப் பாதித்துள்ளது.

அடுத்த சில மணிநேரத்துக்கு காற்றின் தரம் மிதமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமான நடவடிக்கைகளைத் தொடரலாம் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு கூறியது.

இருப்பினும் உடல்நலமில்லாதோர் குறிப்பாக முதியோர், சிறு பிள்ளைகள், இதய நோய், நுரையீரல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் மருத்துவ உதவியை நாடும்படி அது அறிவுறுத்தியது.

Top