Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் காற்று வீசும் திசையைப் பொறுத்து காற்றின் தரம் மோசமடையலாம்

சிங்கப்பூரில் காற்றின் தரம் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமாக இருக்கும்; ஆனால் காற்று வீசும் திசை சாதகமாக இல்லாவிட்டால், காற்றின் தரம் மோசமடையலாம் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் காற்று வீசும் திசையைப் பொறுத்து காற்றின் தரம் மோசமடையலாம்

(படம்: Try Sutrisno Foo)

சிங்கப்பூரில் காற்றின் தரம் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமாக இருக்கும்; ஆனால் காற்று வீசும் திசை சாதகமாக இல்லாவிட்டால், காற்றின் தரம் மோசமடையலாம் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

சுமத்ராவில் புகைமூட்ட நிலவரம் தொடர்ந்து மோசமாகவே இருந்துவருகிறது. அது சிங்கப்பூரில் காற்றின் தரத்தைப் பாதித்திருக்கிறது.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி சிங்கப்பூரின் தென் பகுதியில் காற்றுத் தரநிலைக்குறியீடு 96-ஆகப் பதிவாகியிருக்கிறது.

1 மணி நிலவரப்படி 24 மணிநேரத்துக்கான காற்றுத் தரநிலைக்குறியீடு 84. அது மிதமான நிலை.

  • ஆரோக்கியமாக இருப்பவர்கள் நீண்ட நேரம் உடலை வருத்தும் வெளிப்புற நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் என்று அமைப்பு ஆலோசனை கூறியிருக்கிறது.
  • மூத்தோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் வெளிப்புற நடவடிக்கைகளை முடிந்தவரை குறைத்துக்கொள்வது நல்லது.
  • நாள்பட்ட சுவாசப் பிரச்சினையோ, இதயக்கோளாறோ கொண்டவர்கள் வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம் என்றும் அமைப்பு சொன்னது.
  • வேறு சிரமங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகும்படியும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்