Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் அவ்வப்போது காற்றின் தரம் மோசமடையக்கூடும்: தேசியச் சுற்றுப்புற அமைப்பு

சிங்கப்பூரில் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் அவ்வப்போது காற்றின் தரம் மோசமடையக்கூடும்: தேசியச் சுற்றுப்புற அமைப்பு

(படம்: AFP/Roslan Rahman)


சிங்கப்பூரில் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி 24 மணி நேரத்துக்கான காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு 81ஆக பதிவானது.

இருப்பினும், சிங்கப்பூரில் அவ்வப்போது காற்றின் தரம் மோசமடையக்கூடும் என்று அமைப்பு கூறியது.

கடந்த வாரத்திலிருந்து மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்து மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.

பிற்பகல் 2 மணி நிலவரப்படி சிலாங்கூரில் உள்ள கிள்ளான் பகுதியில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 208ஆகப் பதிவானது.

மலேசியாவில் ஆக ஆரோக்கியமற்ற காற்றின் தரத்தை எட்டிய பகுதியாக கிள்ளான் உள்ளதாய் தெரிவிக்கப்பட்டது.

புகைமூட்டப் பிரச்சினையைக் கையாள வெளிப்புற இடங்களில் எரிப்பதற்கு மலேசியா தடை விதித்துள்ளது.

பருவமழை காலம் முடியும் வரை அந்தத் தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தோனேசியாவின் கலிமந்தான், சுமத்ரா பகுதிகளில் எரியும் காட்டுத் தீ காரணமாக இந்த வட்டாரத்தில் புகைமூட்டப் பிரச்சினைகள் நிலவுகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்