Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் 3 ஆண்டுகளில் முதன்முறையாகக் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது

சிங்கப்பூரில் 3 ஆண்டுகளில் முதன்முறையாகக் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது  

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் கடந்த 3 ஆண்டுகளில் முதன்முறையாக, காற்றுத்தரம்
ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.

இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 24 மணிநேர PSI காற்றுத்தரக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.

இன்று மாலை 4 மணியளவில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (PSI) 100-ஐத் தாண்டி 103ஆக இருந்தது.

சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் 97, வடக்கில் 89, மத்திய வட்டாரத்தில் 88, கிழக்கு பகுதியில் 86 ஆக PSI குறியீடுகள் பதிவாகியுள்ளன.

PSI குறியீடு 50க்கு குறைவாக இருந்ததால் காற்றுத்தரம் ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகப் பொருள்படும்.

51-க்கும் 100க்கும் இடையில் இருந்தால் காற்றுத்தரம் மிதமாக உள்ளதைக் குறிக்கும்.

குறியீடு 100க்கு மேல் சென்றால் அது ஆரோக்கியமற்ற நிலையைக் குறிக்கும்.

காற்று ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கும்போது முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிகள், இதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்கள், வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென தேசியச் சுற்றுப்புற அமைப்பு கேட்டுக்கொண்டது.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்