Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அடுத்த 24 மணிநேரத்தில் புகைமூட்டம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டக்கூடும்: தேசியச் சுற்றுப்புற அமைப்பு

சிங்கப்பூரில் மீண்டும் புகைமூட்டம் காணப்படுகிறது.

வாசிப்புநேரம் -


சிங்கப்பூரில் மீண்டும் புகைமூட்டம் காணப்படுகிறது.

அடுத்த 24 மணிநேரத்தில் அது ஆரோக்கியமற்ற நிலையை எட்டக்கூடும்.

உடல்நிலை சீராக உள்ளவர்கள் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் குறிப்பாக முதியோரும் பிள்ளைகளும் தேவைப்பட்டால் மருத்துவரை நாடும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி காற்றுத் தரக்குறியீடு 39 ஆகப் பதிவாகியிருக்கிறது.

இதற்குமுன் சிங்கப்பூரில் மூவாண்டுக்குமுன் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையைத் தொட்டது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் தீ மூட்டப்படும் சம்பவங்கள் தொடர்வது புகைமூட்டத்துக்குக் காரணம்.

காற்றின் திசைக்கேற்ப புகைமூட்டத்தின் கடுமை அதிகரிக்கிறது.

சுமத்ராவில் விளைநிலங்களையும் காடுகளையும் எரிக்கும் போக்கு தொடர்ந்தால் நிலைமை மோசமாகி காற்றுத் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலைக்குச் சென்றுவிடும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு எச்சரித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்