Images
  • haze
    (படம்: TODAY)

வட்டாரத்தில் புகைமூட்டம் இருப்பினும் சிங்கப்பூரில் மிதமான காற்றுத் தரம்

இந்தோனேசியாவின் கலிமந்தான், சுமாத்ரா பகுதிகளில் காட்டுத் தீச் சம்பவங்கள் அதிகரித்துள்ளபோதும், சிங்கப்பூரில் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளது.

இன்று காலை 5 மணி நிலவரப்படி, 24 மணிநேரத்துக்கான காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டில், 72 ஆகப் பதிவானது.

அது மிதமான காற்றுத் தரத்தைக் குறிக்கும்.

காற்றுத் தரம் அடுத்த 24 மணிநேரத்துக்கு மிதமான அளவில் இருக்கலாம் என தேசிய சுற்றுப்புற அமைப்பு முன்னுரைத்துள்ளது.

இந்தோனேசியாவில் எரியும் காட்டுத் தீயால், மலேசியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் காற்றின் தரம் இவ்வாண்டு காணாத அளவில் ஆக உச்சத்தைத் தொட்டுள்ளது.
சில பகுதிகளில் காற்றின் தரம், ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருக்கிறது.
புகைமூட்டம் காரணமாக வெளிப்புறங்களில் குப்பைகளை எரிப்பதற்கு அந்நாட்டு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

Top