Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான வீட்டிலிருந்து பயிலும் நடைமுறை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படும்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான வீட்டிலிருந்து பயிலும் நடைமுறை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படும்

வாசிப்புநேரம் -

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான வீட்டிலிருந்து பயிலும் நடைமுறை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படுவதாக அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு தெரிவித்துள்ளது.

கிருமிப்பரவல் அதிகரித்துவரும் வேளையில், மேலும் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுவது குறித்து பணிக்குழு அறிவித்தது.

தொடக்கப்பள்ளி மாணவர்கள், சிறப்புத் தேவையுடைய மாணவர்கள்:

ஏற்கனவே, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும், SPED எனும் சிறப்புத் தேவையுடையோருக்கான பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும், வரும் திங்கட்கிழமை முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6ஆம் தேதி வரை வீட்டிலிருந்து பயிலும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

அது தற்போது அக்டோபர் ஏழாம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை முதல் 29ஆம் தேதி வரை தேர்வுக்குத் தயாராகும் விடுமுறையில் இருப்பர்.

தனியார் கல்வி நிலையங்கள் :

12 வயது அல்லது அதற்குக் கீழுள்ள பிள்ளைகளுக்கு, தனியார் கல்வி அமைப்புகளும் வீட்டில் இருந்து பயிலும் நடைமுறையை அமல்படுத்தவேண்டும்.

வரும் திங்கட்கிழமை முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை அதை நடைமுறைப்படுத்துமாறு அவை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

துணைப்பாட வகுப்புகள் :

இந்த காலக்கட்டத்தில், 12 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகளுக்கான துணைப்பாட வகுப்புகள் ரத்து செய்யப்படவேண்டும் அல்லது இணையம் வழி நடத்தப்படவேண்டும்.

பாலர் பள்ளிகள், குழந்தைப் பராமரிப்புச் சேவைகள் ஆகியவை தொடர்ந்து திறந்திருக்கும். இருப்பினும், முடிந்தால் பெற்றோர் பிள்ளைகளை வீட்டிலேயே வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேல்விவரங்களை கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பெறலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்