Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முதல்முறை வீடு வாங்குவோருக்கு 80,000 வெள்ளி வரை வழங்கும் மேம்படுத்தப்பட்ட புதிய மானியம்

EHG எனப்படும் மேம்படுத்தப்பட்ட புதிய மத்திய சேமநிதி வீட்டு மானியம் குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
முதல்முறை வீடு வாங்குவோருக்கு 80,000 வெள்ளி வரை வழங்கும் மேம்படுத்தப்பட்ட புதிய மானியம்

(படம்: Reuters/Kevin Lam)

EHG எனப்படும் மேம்படுத்தப்பட்ட புதிய மத்திய சேமநிதி வீட்டு மானியம் குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக வீடு வாங்குவோருக்குக் கைகொடுக்கும் வகையில் அறிமுகம் செய்யப்படும் EHG மானியம், முன்னர் நடப்பிலிருந்த மானியங்களுக்கு மாற்றாக அமையும்.

மறுவிற்பனை வீடுகளை வாங்குவோர், புதிய வீடுகளை வாங்குவோர் இரு தரப்பினருக்கும் புதிய மானியம் பொருந்தும்.

எத்தகைய வீடு, அது அமைந்திருக்கும் பகுதி ஆகிய அம்சங்களில் கட்டுப்பாடுகள் இல்லை.

தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், குறைந்த வருமானக் குடும்பங்கள் முதல் உயர் நடுத்தர வருவாய்க் குடும்பங்களைச் சேர்ந்தோர் வரை பல தரப்பினருக்கும் உதவும் வகையில் பல நடைமுறைகளை இன்று அறிவித்தார்.

கழக வீடுகளை வாங்குவோருக்கான வருமான உச்சவரம்பு உயர்த்தப்படவுள்ளது.

புதிய மானியத்திற்குத் தகுதிபெறுவோர், முதன்முறையாக வீடு வாங்கும்போது 80,000 வெள்ளி வரை உதவித் தொகை பெற வாய்ப்பு உண்டு.

உதாரணமாக, மாதந்தோறும் 4,800 வெள்ளி வரை வருமானம் பெறும் ஒரு குடும்பம், முதிர்ச்சியடைந்த பேட்டையில் தேவைக்கேற்ப கட்டப்படும் நாலறை வீட்டை வாங்கினால் புதிய மானியத்தின்கீழ் அதற்கு 45,000 வெள்ளி வரை உதவி பெறக்கூடும்.

தற்போதிருக்கும் திட்டத்தின்கீழ் 5,000 வெள்ளி மட்டுமே வழங்கப்படுகிறது.

புதிய அனுகூலங்கள் நாளை முதல் நடப்புக்கு வருகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்