Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விற்பனைக்கு வரும் 3,700 புதிய கழக வீடுகள்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், இந்த ஆண்டின் முதல் வீட்டு-விற்பனைத் திட்டத்தின் கீழ் சுமார் 3,700 வீடுகளைப் பட்டியலிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
விற்பனைக்கு வரும் 3,700 புதிய கழக வீடுகள்

(படம்: HDB)

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், இந்த ஆண்டின் முதல் வீட்டு-விற்பனைத் திட்டத்தின் கீழ் சுமார் 3,700 வீடுகளைப் பட்டியலிட்டுள்ளது.

தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகள் மற்றும் எஞ்சிய வீடுகளின் விற்பனைக்கான திட்டம் அது.

விற்பனைக்கு விடப்பட்டுள்ள வீடுகளில் பெரும்பாலானவை தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகள்.

முதிர்ச்சியடையாத வீடமைப்புப் பேட்டைகளான ஜூரோங் வெஸ்ட், செங்காங் ஆகியவற்றில் மூன்றும், முதிர்ச்சியடைந்த நகரான காலாங் வாம்போவில் இரண்டும் என, மொத்தம் 5 வீடமைப்புத் திட்டங்களின் கீழ் அவை அமைந்திருக்கும்.

Boon Lay Glade, Jurong West Jewel, Fernvale Vines, Kallang Breeze, Towner Crest ஆகியவை அவை.

பூன் லே வட்டாரத்தில் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் ஈரறை-Flexi-வீடுகளின் விலை, 95,000 வெள்ளியாக இருக்கும். காலாங் வாம்போவில் நாலறை வீடுகள் சுமார் 523,000 வெள்ளிக்கு விற்கப்படும்.

வீடுகளை வாங்க விரும்புவோர், இன்று முதல் அடுத்த திங்கட்கிழமை வரை விண்ணப்பம் செய்யலாம்.

தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகள் அல்லது எஞ்சிய வீடுகளின் விற்பனை என ஏதாவது ஒரு திட்டத்துக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

கழகத்தின் அடுத்த வீட்டு விற்பனைத் திட்டம் மே மாதத்தில் அறிவிக்கப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்