Images
  • hdb (2)
    (படம்: Gaya Chandramohan)

கடந்த ஆண்டிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட பொது வீடமைப்புத் திட்டங்களில் சுமார் 70 விழுக்காடு தாமதத்தை எதிர்நோக்கியுள்ளன

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், கடந்த ஆண்டிலிருந்து கட்டிமுடிக்கப்பட்ட பொது வீடமைப்புத் திட்டங்களில் சுமார் 70 விழுக்காடு, 6 மாதம் வரையிலான தாமதத்தை எதிர்நோக்கியதாகத் தெரிவித்துள்ளது.

ஏனைய திட்டங்கள் 7 முதல் 10 மாதங்கள் வரை தாமதமாகின.

நோய்ப்பரவல் தொடங்கியதிலிருந்து கழகம் மொத்தம் 25 குடியிருப்புத் திட்டங்களைக் கட்டி முடித்துள்ளது.

குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகள் தயாராவதற்குச் சராசரியாக 4 வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளதாக அது குறிப்பிட்டது.

நோய்ப்பரவலுக்கு முன்னர் வீட்டு உரிமையாளர்கள் 3 இலிருந்து 4 ஆண்டுகள் வரை வீட்டிற்காகக் காத்திருந்தனர்.

அதிரடித் திட்டம் நடப்பில் இருந்தபோது கட்டுமானப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், கட்டுமானத் துறையை மேலும் பாதித்தன.

தாமதத்தைக் கையாளவும் கட்டுமான ஊழியர்களிடையே நோய்ப்பரவலைக் குறைக்கவும், கழகம் தற்காலிக வசிப்பிடங்களை அமைத்தது.

கட்டுமானத்தின் சில அம்சங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

நோய்ப்பரவல் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைக் கண்காணித்துவருவதாகக் கழகம் குறிப்பிட்டது.

திட்டங்களை விரைவில் முடிக்கக் கூடுதல் முயற்சிகளை எடுப்பதற்குத் தயாராய் இருப்பதாகவும் அது தெரிவித்தது.

கடந்த அண்டு ஜனவரியிலிருந்து கழகம் 16,000க்கும் மேற்பட்ட புதிய வீடுகளைக் கட்டி முடித்துள்ளது. 

Top