Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கழக வீடுகளின் மதிப்பு, தனியார் அடுக்கு வீடுகளின் மதிப்பை விடக் குறைவாகச் சரிகிறது

30 ஆண்டுக்கு மேல் பழமையான வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் மதிப்பு, தனியார் அடுக்கு வீடுகளின் மதிப்பை விடக் குறைவாகச் சரிகிறது என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
கழக வீடுகளின் மதிப்பு, தனியார் அடுக்கு வீடுகளின் மதிப்பை விடக் குறைவாகச் சரிகிறது

(படம்: Gaya Chandramohan)

30 ஆண்டுக்கு மேல் பழமையான வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் மதிப்பு, தனியார் அடுக்கு வீடுகளின் மதிப்பை விடக் குறைவாகச் சரிகிறது என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் அந்த ஆய்வை நடத்தியது.

10 ஆண்டுக்குப் பிறகு தான் தனியார் வீடுகளின் மதிப்புச் சரிவும் கழக வீடுகளின் மதிப்புச் சரிவும் வேறுபடத் தொடங்குவதாக ஆய்வில் தெரியவந்தது.

21 ஆண்டு அல்லது அதற்கு மேல் பழமையான கழக வீடுகளின் மதிப்பு மூன்று விழுக்காடு சரிவு காணும் என்றும் அதே ஆண்டுகள் பழமையான தனியார் வீடுகளின் மதிப்பு 10 விழுக்காட்டிற்கும் அதிகமாகச் சரிவு காணும் என்று விளக்கப்பட்டது.

30 ஆண்டுக்கு மேல் பழமையான தனியார் வீடுகளின் மதிப்பு அதிகமாகக் குறைவதற்கு, கட்டடமும் அதன் சுற்றுச்சூழலும் சரியாகப் பராமரிக்கப்படாதது காரணமாக இருக்கலாம் என்று தேசியப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் சிங் தியென் ஃபூ (Sing Tien Foo) கூறினார்.

அரசாங்கத்தின் இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின் வழி கழக வீடுகள் தொடர்ந்து பராமரிக்கப்படுவதால் பழமையின் பாதிப்பு தனியார் வீடுகளை விட அங்கு குறைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்