Images
  • hdb (1)
    (கோப்புப் படம்: Reuters/Kevin Lam) 

கழக வீடுகளை வாங்குவோருக்கும் விற்பவர்களுக்கும் ஒரு புதிய இணையவாசல்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், வீடுகளை வாங்குவோருக்கும் விற்பவர்களுக்கும் ஒரு புதிய இணையவாசலை வெளியிட்டுள்ளது.

வீடு வாங்குவோர் தங்களது நிதிநிலைமை, கட்டணத் திட்டம் ஆகியவற்றைச் சரிபார்க்க, தனிப்பட்ட நிதிக் கணிப்பானைப் பயன்படுத்தலாம்.

வீட்டுக் கடன்கள் தொடர்பான தகவல்களைப் பெற, கடன் வசதிகளுக்கான பட்டியல் இணையவாசலில் இடம்பெற்றுள்ளது.

வீடுகளை விற்போர், வீட்டு விற்பனையின் மூலம் பெறும் மிச்சத் தொகையைப் பார்வையிடும் சேவையும் உள்ளது.

வருங்காலத்தில் வெளியிடப்படும், தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளைப் பற்றிய தகவல்களும் அதில் இடம்பெறும்.

இணையவாசலின் அடுத்தடுத்த மேம்பாடுகளில், மறுவிற்பனை செய்யப்படும் வீடுகளின் பட்டியலை உள்ளடக்குவது குறித்து, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பரிசீலித்துவருகிறது.
 

Top