Images
  • HDB
    (படம்: AFP)

5ஆம் காலாண்டாக அதிகரித்துள்ள மறுவிற்பனை வீட்டு விலைகள்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மறுவிற்பனை வீட்டு விலைகள் 5ஆம் காலாண்டாக அதிகரித்துள்ளன.

இந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் காலாண்டில்..
வீட்டு விலைகளின் அதிகரிப்பு

இறுதி நிலவரம் - 3%

முன்னோடி மதிப்பீடு - 2.8%

இந்நிலையில், அடுத்த மாதம் சுமார் 4,900 தேவைக்கேற்பக் கட்டப்படும் வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.

வீடுகள், ஹவ்காங் (Hougang), ஜூரோங் ஈஸ்ட் (Jurong East), காலாங் வாம்ப்போ (Kallang Whampoa), குவீன்ஸ்டவுன் (Queenstown), தெம்பனிஸ் (Tampines) ஆகிய வட்டாரங்களில் இடம்பெறும்.

வரும் நவம்பர் மாதம், சுமார் 3,100 இலிருந்து 3,600 தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகள் விற்பனைக்கு வரவுள்ளன.

வீடுகள், சுவா சு காங் (Choa Chu Kang), ஹவ்காங், ஜூரோங் வெஸ்ட் (Jurong West), காலாங் வாம்ப்போ, தெங்கா (Tengah) ஆகியப் பகுதிகளில் இடம்பெறும்.

இதற்கிடையே, தனியார் வீட்டு விலைகள் இரண்டாம் காலாண்டில் சற்றே உயர்ந்ததாக நகரச் சீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தனியார் வீட்டு விலைகளின் அதிகரிப்பு

இறுதி நிலவரம் - 0.8%
முன்னோடி மதிப்பீடு - 0.9%

ஒப்புநோக்க, முதல் காலாண்டில் விலைகள் 3.3 விழுக்காடு அதிகரித்திருந்தன.

Top