Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மாற்றங்களால் வீடு வாங்குவோர் பயன்பெற இம்மாதக் கழக வீட்டு விற்பனை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு

வீடமைப்பு வளர்சிக் கழகம், இந்த மாத வீட்டு விற்பனையை அடுத்த மாதத்திற்குத் தள்ளிப் போட்டிருப்பதாய்த் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -
மாற்றங்களால் வீடு வாங்குவோர் பயன்பெற இம்மாதக் கழக வீட்டு விற்பனை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு

கோப்புப் படம்: Reuters/Loriene Perera

வீடமைப்பு வளர்சிக் கழகம், இந்த மாத வீட்டு விற்பனையை அடுத்த மாதத்திற்குத் தள்ளிப் போட்டிருப்பதாய்த் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் இன்று தமது Facebook பக்கத்தில் அவ்வாறு பதிவிட்டுள்ளார்.

எதிர்வரும் மாற்றங்களால் கூடுதலானோர் நன்மையடையும் நோக்கில் கழகம் இந்த மாத விற்பனையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்ததாய் அவர் கூறினார்.

மேல் விவரங்களை அடுத்த மாதம் அறிவிக்கவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய வளர்ச்சி அமைச்சும், வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும், முதல் முறை வீடு வாங்குவோருக்கு எவ்வாறு கூடுதல் ஆதரவு வழங்கலாம் என்பதை ஆராய்ந்து வருவதாகவும் திரு. வோங் தெரிவித்தார்.

கழகம் எதிர்வரும் காலாண்டு விற்பனை நடவடிக்கையில் பொங்கோல், தெம்பனிஸ் ஆகிய இடங்களில் சுமார் 3,300 வீடுகள் விற்பனைக்கு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்