Images
  • HDB flat

குறிப்பிட்ட சில வசதிகளுக்கான சிங்கப்பூரர்களின் தேவை எவ்வாறு பாதிப்படைகிறது என்பது பற்றிய புதிய ஆய்வு

சிங்கப்பூரர்களின் குறிப்பிட்ட சில வசதிகளுக்கான தேவையை, அவர்களின் மாறிவரும் வாழ்க்கைமுறை எவ்வாறு பாதிக்கிறது என்பதை வீடமைப்பு வளர்ச்சி கழகம் அறிய விரும்புகிறது.

அது குறித்து, சுமார் 8,000 குடும்பங்களை உள்ளடங்கிய 26 குடியிருப்பு வட்டாரங்களில் கழகம் ஆய்வு நடத்தத் திட்டமிடுகிறது.

அண்மையில் இணையத்தில் பொருட்கள் வாங்கினார்களா?

சைக்கிள், கார் பகிர்வுச் சேவையைப் பயன்படுத்தினார்களா?

இதுபோன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள் குறித்த தகவல்கள், கருத்தாய்வில் திரட்டப்படும்.

குடியிருப்பாளர்களின் மனநிறைவு குறித்த கேள்விகளும் கேட்கப்படும்.

குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள பொழுதுபோக்கு, சமூக வசதிகள் எந்த அளவுக்குப் பயனுள்ளவையாக உள்ளன என்பதும் கண்டறியப்படும்.

வட்டாரத்தில் தங்களுக்கு நெருக்கமான ஓரிடத்தைக் குடியிருப்பாளர்கள் அடையாளம் காட்டவும் ஆய்வு வழிவகுக்கும்.

புதிய குடியிருப்பு வட்டாரங்களை வடிவமைக்கும்போது, கருத்தாய்வின் கண்டுபிடிப்புகள் கவனத்தில் கொள்ளப்படும்.  

Top