Images
  • HDB (1)

ஏங்கர்வேல் கிரெசண்ட்டில் எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளுக்கான நிலப்பகுதி விற்பனைக்கு

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், ஏங்கர்வேல் கிரெசண்ட்டில் எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளுக்கான நிலப்பகுதியை ஒதுக்கப்பட்ட பட்டியலின் கீழ் விற்பனைக்கு அறிவித்துள்ளது.

அதற்கான பொது ஏலக் குத்தகை அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 10) வெளியானது.

17,137 சதுர மீட்டர் பரப்பளவுகொண்ட அந்த நிலப் பகுதியில் அதிகபட்சமாக 550 வீடுகளைக் கட்டமுடியும்.

அரசாங்கத்தின் நில விற்பனைத் திட்டத்தின்படி, ஒதுக்கப்பட்ட பட்டியலின் கீழ் வரும் நிலப் பகுதிக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய குத்தகைத் தொகையைத் தர சொத்து நிறுவனங்கள் முன்வந்தால் மட்டுமே அது விற்பனைக்கு விடப்படும்.

சென்ற மாதம் 25ஆம் தேதி ஏங்கர்வேல் கிரெஸண்ட் நிலப்பகுதிக்கு 255 மில்லியன் வெள்ளி குத்தகைத் தொகை முன்மொழியப்பட்டதாய்த் தெரிவிக்கப்பட்டது.

அந்த நிலப்பகுதிக்கான ஏலக் குத்தகை விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 14ஆம் தேதி நண்பகலுக்குள் வந்துசேரவேண்டும் என்று கழகம் தெரிவித்தது.

Top