Images
  • contact tracing
    (கோப்புப் படம்: Xabryna Kek)

COVID-19 சூழலில் சிங்கப்பூருக்கு புதிய தொழில்நுட்பமும் தரவுச் செயல்திறனும் கைகொடுத்தன : அமைச்சர் மசகோஸ்

சிங்கப்பூர், COVID-19 சூழலில் புதிய தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள, புதிய தொழில்நுட்பமும் தரவுச் செயல்திறனும் கைகொடுத்திருக்கின்றன.

தொடர்புத் தடங்களைக் கண்டறிதல், பரிசோதனை செய்தல், தடுப்புமருந்து வழங்குதல் போன்றவற்றில் அவை உதவியாக இருந்துள்ளன.

பரந்துபட்ட பயன்பாட்டுக்குப் புத்தாக்க முயற்சிகள் நீக்குப்போக்குடன் இருப்பது அவசியம் என இரண்டாம் சுகாதார அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃபிலி ( Masagos Zulkifli) கூறியிருக்கிறார்.

சுகாதாரப் பராமரிப்புத் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துகொண்டு அவர் பேசினார்.

மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்ய நமது கட்டமைப்புகள் எதிர்காலத்துக்கு உகந்தவையாக இருப்பதை உறுதிசெய்வது அவசியம் என்றார் திரு. மசகோஸ்.

சுகாதாரப் பராமரிப்பு நிர்வாகத்தில் மேலும் மின்னிலக்கமயமான தெரிவுகளைப் பயன்படுத்துவது அவற்றில் அடங்கும்.

அதன்மூலம், நோயாளிகளை நேரடியாகப் பராமரிப்பதில் நிபுணர்கள் கூடுதல் கவனம் செலுத்த இயலும்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் மாநாட்டில் பேசப்பட்டது.

மக்கள் எதிர்நோக்கக்கூடிய சுகாதார அபாயங்கள், போக்குகள் ஆகியவற்றை அடையாளம் கண்டு, முன்கூட்டியே சிகிச்சை அளிக்க அது உதவும் என்றார் திரு. மசகோஸ்.  

Top