Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரர்கள் வூஹான் நகரத்திற்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: சுகாதார அமைச்சு

சிங்கப்பூரர்கள் வூஹான் நகரத்திற்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரர்கள் வூஹான் நகரத்திற்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: சுகாதார அமைச்சு

படம்: AFP

சிங்கப்பூரர்கள் வூஹான் நகரத்திற்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

சீனாவின் பல பகுதிகளுக்குக் கொரோனா கிருமி பரவி வருவதால் அந்தப் பயண ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள், நல்ல சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கைகளை நன்றாகக் கழுவுதல், இருமலோ சளியோ இருந்தால் சுவாசக்  கவசங்களை அணிதல், கூட்ட நெரிசல்மிக்க இடங்களைத் தவிர்த்தல் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

பயணிகள் உயிர் விலங்குகளுடன் தொடர்புகளைத் தவிர்க்கவேண்டும் என்றும் சமைக்கப்படாத இறைச்சி வகைகளை உட்கொள்ளவேண்டாம் என்றும் ஆலோசனை கூறப்படுகிறது.

அனைத்துப் பயணிகளும் சிங்கப்பூருக்குத் திரும்பிய பிறகு 2 வாரங்களுக்கு அவர்களின் உடல் நலத்தைக் கண்காணிக்குபடி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்