Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிரடித் திட்டம் முடிவுக்கு வரும்போது என்னென்ன சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை நாடலாம்?

நோய்ப்பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் ஜூன் முதல் தேதி தளர்த்தப்படுகிறது. சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் சில மீண்டும் தொடங்கவுள்ளன. 

வாசிப்புநேரம் -
அதிரடித் திட்டம் முடிவுக்கு வரும்போது என்னென்ன சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை நாடலாம்?

(படம்: Facebook/Tan Tock Seng Hospital)

நோய்ப்பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் ஜூன் முதல் தேதி தளர்த்தப்படுகிறது. சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் சில மீண்டும் தொடங்கவுள்ளன. கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவது, புதிய குழுமங்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்வது ஆகிய நோக்கங்களுடன் அவை கட்டங்கட்டமாகத் தொடங்கப்படுகின்றன.

அவசரத் தேவை உள்ளவர்களுக்கான சேவைகள் முதலில் தொடங்கும். சீரான நிலையில் உள்ளவர்களுக்கான சேவைகள் பின்னர் தொடங்கும். தோற்றத்தை மெருகூட்டப் பயன்படுத்தப்படும் சிகிச்சைகள் போன்றவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டிருக்கும்.

2 ஆம் தேதியிலிருந்து தொடங்கப்படும் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள்...

  • நிபுணத்துவ வெளிநோயாளி சேவைகள்
  • கூடுதல் தேவை உள்ளவர்களுக்கான சேவைகள்
  • தள்ளிப்போட முடியாத கண், காது, மூட்டு போன்ற நாட்பட்ட பிரச்சினைகளுக்கான அறுவைச் சிகிச்சைகள்
  • வழக்கமான பல் மருத்துவச் சேவைகள்
  • சளிக்காய்ச்சலுக்கான தடுப்பூசிகள், ராணுவச் சேவைகளுக்குச் செல்வோருக்கான மருத்துவப் பரிசோதனைகள்
  • தேவைப்படும் நோயாளிகளின் வீட்டிற்குச் சென்று சிகிச்சை வழங்கப்படும் சேவைகள்
  • ஆயுர்வேதம், சீனப் பாரம்பரிய மருத்துவச் சேவைகள்
  • chiropractic, osteopathic போன்ற மருத்துவப் பிரச்சினைகளுக்கான சேவைகள்

அனைத்துச் சேவைகளும் முகக் கவசம் அணிவது, மருத்துவ உபகரணங்களைக் கிருமிநீக்கம் செய்வது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்படவேண்டியது கட்டாயம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்