Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆரோக்கியமாக, துடிப்பாக முதுமை அடைவதை ஊக்குவிக்கும் புதிய இயக்கம்

துடிப்பாக முதுமையடைவதை ஊக்குவிக்க Health Up! எனும் புதிய முயற்சி அறிமுகமாகிறது.

வாசிப்புநேரம் -
ஆரோக்கியமாக, துடிப்பாக முதுமை அடைவதை ஊக்குவிக்கும் புதிய இயக்கம்

படம்: SingHealth

துடிப்பாக முதுமையடைவதை ஊக்குவிக்க Health Up! எனும் புதிய முயற்சி அறிமுகமாகிறது.

அது தெம்பனிஸில் முன்னோடித் திட்டமாகத் தொடங்கவிருக்கிறது.

திட்டம் பின்னர் அனைத்து அக்கம்பக்க வட்டாரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

தெம்பனிஸில் இன்று பிற்பகல் Health Up! இயக்கம் அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது.

40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்கானது அந்தத் திட்டம்.

அதில் சேர்வோருக்கு இலவசச் சுகாதாரப் பரிசோதனையும் உடலுறுதி மதிப்பீடும் வழங்கப்படும்.

உறுப்பினர்களுக்குத் தனிப்பட்ட நலவாழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.

அவர்களுக்கென 6 வார உடற்பயற்சி, உணவுப் பழக்க நடைமுறை வகுக்கப்படும்.

SingHealth ஊழியர்களான ஒருங்கிணைப்பார்கள் அவர்களின் முன்னேற்றத்தையும் கண்காணிப்பர்.

தெம்பனிஸ்வாசிகள் ஆரோக்கியப் பழக்க வழக்கங்களைத் தொடரச் சிரமப்படுவதாக ஆய்வு ஒன்று கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SingHealth பலதுறை மருந்தகங்கள், சுகாதார மேம்பாட்டு வாரியம், Sports SG, பொது மருந்தகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து அந்த முயற்சியை மேற்கொள்கின்றன.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்