Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் மருத்துவமனைகளில் 5G கட்டமைப்பில் இயங்கும் சுகாதாரப் பராமரிப்புத்துறைத் தொழில்நுட்பங்கள்

சிங்கப்பூரிலுள்ள நோயாளிகள், மேம்பட்டு வரும் சுகாதாரப் பராமரிப்புத்துறைத் தொழில்நுட்பங்களின் மூலம் விரைவில் பலனடையவிருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரிலுள்ள நோயாளிகள், மேம்பட்டு வரும் சுகாதாரப் பராமரிப்புத்துறைத் தொழில்நுட்பங்களின் மூலம் விரைவில் பலனடையவிருக்கின்றனர்.

சிறப்புத் திறன் படைத்த கணினிகள் 5G கட்டமைப்பு ஆகியவற்றால் அது சாத்தியமாகக்கூடும்.

அவை நோயாளிகள் குணமடையும் போக்கை முன்கூட்டியே கணிப்பது, அறுவை சிகிச்சையின்போது, நிபுணர்களுக்கு உதவி செய்யும் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

மருத்துவமனை வளாகங்களில் அதுபோன்ற தொழில்நுட்பங்கள் சீராக இயங்குவதற்குத் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் சுகாதார அமைப்பு முற்படுகிறது.

5G கட்டமைப்பை உருவாக்க Singtel நிறுவனத்துடன் அது இணைந்து செயல்படுகிறது.

செயற்கை நுண்ணறிவைக் கொண்டு சுகாதாரத்துறையில் தீர்வுகளை உருவாக்க, அறிவியலாளர்களுக்கான சிறப்புத் திறன் படைத்த கணினி அமைப்பைச் செய்து தருவதில் சிங்கப்பூர் ஈடுபட்டுள்ளது.

இயந்திரக் கருவிகள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள இடங்கள், பொருள்கள் ஆகியவற்றை அடையாளம் காண்பதில் கணினிகள் உதவும்.

அந்தத் தனிப்பட்ட சிறப்புத் திறன் படைத்த கணினிகள், அனைத்து பொதுச் சுகாதாரத்துறை நிலையங்களிலும் பயன்படுத்தப்படும்.

தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் சுகாதார அமைப்புக்கும், சிங்கப்பூர்த் தேசியக் கணினி நிலையத்துக்கும் இடையே அதன் தொடர்பில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்