Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இளைஞர்களையும் மூத்தோரையும் ஈர்க்க முனையும் Heartlands திருவிழா!

சிங்கப்பூரின் குடியிருப்பு வட்டாரங்களுக்கு  இளைஞர்களையும் முதியோரையும் ஈர்க்கும் நோக்கத்தில் நாடளாவிய திருவிழா ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் குடியிருப்பு வட்டாரங்களுக்கு இளைஞர்களையும் முதியோரையும் ஈர்க்கும் நோக்கத்தில் நாடளாவிய திருவிழா ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 40 ஆயிரம் வணிகங்களுக்கு அது உதவும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.

மூன்று மாதத்திற்கு நடைபெறும் Heartlands திருவிழா நேரடி, மெய்நிகர் நடவடிக்கைகளைக் கொண்டிருக்கும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் சுற்றுப்பயணங்கள், உணவுப் போட்டிகள், பொருள்கள் வாங்கும் போட்டிகள், பிடித்த வியாபாரிக்கு வாக்குகள் அளிக்கும் சமூக ஊடகப் பிரசாரம் ஆகியவை அவற்றில் அடங்கும்.

கிருமிப்பரவல் தொடங்கியதிலிருந்து ​​குடியிருப்பு வட்டாரங்களில் மக்கள் நடமாட்டம் பாதியாகக் குறைந்துவிட்டது என்று சிங்கப்பூர் வணிகர்கள் சங்கச் சம்மேளனம் கூறியது.

புதிய நடவடிக்கைகள் வட்டாரங்களில் மீண்டும் உற்சாகத்தைக் கொண்டுவரும் என்று அது நம்புகிறது.

குடியிருப்பு வட்டாரங்களிலுள்ள வணிகங்கள் வளர்ச்சி அடைய, அவையும் மாறிக்கொள்ளவேண்டும் என்று துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) கூறினார்.

கூடுதல் வணிகங்கள் இணையம்வழி செயல்படுவதால் மற்ற வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களையும் அவை ஈர்க்க முடிகிறது என்று அவர் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்