Images
  • sg covid (34)
    (படம்: Jeremy Long)

சிற்றங்காடிகளில் 24 மணிநேரமும் பொருள்வாங்கலாம்... மின்னிலக்க முகப்புகள் மூலம்...

Minimart எனப்படும் சிற்றங்காடிகளில் 24 மணிநேரமும் பொருள்வாங்க வகைசெய்யும் மின்னிலக்க முகப்புகள் சோதிக்கப்படுகின்றன.

சிறிய வர்த்தகங்கள் மின்னிலக்கத் தீர்வுகளை ஏற்பதை ஊக்குவிக்கவும் வருமானத்தைப் பெருக்கவும்
அந்த ஓராண்டு முன்னோடித் திட்டம் முனைகிறது.

இதுவரை இரண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழகப்பேட்டைகளில் 11 முகப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

புக்கிட் கொம்பாக்கில் (Bukit Gombak) இதுபோன்ற 7 முகப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

 உணவு, வீட்டிற்குத் தேவைப்படும் அன்றாடப் பொருள்கள் ஆகிய 150 பொருள்கள் முகப்புகளில் உள்ளன.

எந்நேரத்திலும் குடியிருப்பாளர்கள் அங்குசென்று விருப்பப்பட்டதை வாங்கலாம்.

அதற்கு அவர்கள் ஒரு கணக்கைப் பதிவுசெய்வதுடன் QR குறியீட்டை வருட வேண்டும்.

எடுக்கும் பொருள்களுக்கான பணம், கணக்கிலிருந்து கழித்துக்கொள்ளப்படும்.

முகப்புகளை ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுக்க சுமார் 200 வெள்ளி செலவாகிறது.

எந்தெந்தப் பொருள்கள் விற்பனையாகின்றன, வாடிக்கையாளர்கள் எதை விரும்புகின்றனர் போன்ற தகவல்கள் வழங்கப்படும்.

Top