Images
  • hearts
    (படங்கள்: PA)

உள்ளங்களின் ஒற்றுமையைக் குறிக்கும் கலைப்படைப்புகள்

சிங்கப்பூரின் பல்வேறு குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள புளோக்குகளில் உள்ளங்களின் ஒற்றுமையைக் குறிக்கும் “HeARTs in Unity” எனும் கலைப்படைப்புகள் இடம்பெற்றுள்ளன.


தேசிய தினத்தை முன்னிட்டு குடியிருப்பாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் அவற்றை மக்கள் கழகத்தின் PAssionArts அமைப்பும் சமூகக் கலை, கலாசார மன்றங்களும் உருவாக்கியுள்ளன.


அதிரடித் திட்டத்தின்போது குடியிருப்பாளர்கள் தங்கள் கதைகளையும் நாட்டிற்கான தங்கள் விருப்பங்களையும் பகிர்ந்துகொண்டனர். அவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் படைப்புகள் அமைந்துள்ளன.


11 குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள புளோக்குகளின் முகப்புகளில் படைப்புகள் இடம்பெறும்.


அவற்றை ஆண்டிறுதி வரை காணலாம்.


 

Top