Images
  • HEAT

மற்ற நாடுகளைவிட சிங்கப்பூர் இரு மடங்கு வேகமாகச் சூடாகிறதாம். ஏன்?

வீட்டைவிட்டு வெளியேறியவுடனேயே பலருக்கு உடல் முழுவதிலும் வியர்வைத் துளிகள் நிரம்பிவிடுகின்றன....

வீட்டிலோ, அலுவலகத்திலோ குளிர்சாதனப்பெட்டியின் தயவில் நாட்களைக் கழிப்போர் நம்மில் பலர் உண்டு....

ஏன்?

சிங்கப்பூர் என்ன அவ்வளவு சூடான நாடாகிறதா?

சிங்கப்பூரின் வெப்பநிலையை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அது இரண்டு மடங்கு அதிகமாய் இருப்பதாகச் சிங்கப்பூர் வானிலை நிலையம் கூறியிருக்கிறது.


கரியமில வாயு வெளியேற்றம் தொடர்ந்தால் 2100ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரின் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கும் 37 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்டிருக்கும் என வானிலை நிலையம் குறிப்பிட்டது.

சிங்கப்பூரின் சூடும் ஈரத்தன்மையும் அதிகரிக்கும்போது அதைத் தாங்கிக்கொள்ள உடல் சிரமப்படுகிறது. தொடர்ந்து மனஉளைச்சலும் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

Top