Images
  • Heavy Vehicle 2
    (படம்: CNA)

கனரக வாகன விபத்துகளால் மாண்டோர் எண்ணிக்கை குறைந்தது


கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் மரணத்தை விளைவித்த விபத்துகள், சென்ற ஆண்டு சுமார் மூன்றில் ஒரு பங்கு குறைந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அதே போல, கனரக வாகன விபத்துகளால் மாண்டோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

கனரக வாகன விபத்துகளால் மாண்டோர் எண்ணிக்கை:

2018: 26
2017: 34


எனினும், கனரக வாகனங்களால் நேர்ந்த மொத்த விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு, அதற்கு முந்திய ஆண்டுடன் ஒப்புநோக்க சற்று அதிகரித்திருந்தது.

கனரக வாகனங்களால் நேர்ந்த மொத்த விபத்துகள்:

2018: 1200
2017: 1177

கனரக வாகன விபத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை:

2018: 1174
2017: 1143


போக்குவரத்துக் காவல் துறை, நிலப் போக்குவரவு ஆணையம், தேசியச் சுற்றுப்புற அமைப்பு ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில் புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டன.

கனரக வாகனங்களைக் கண்மூடித்தனமாகச் செலுத்தும் ஓட்டுநர்களின் மீது நடவடிக்கை எடுப்பது அந்தக் கூட்டு முயற்சியின் நோக்கம்.

வேக வரம்பை மீறியது, பாதுகாப்பு இருக்கை வார் அணியாதது, விரைவுச்சாலையில் இடது தடத்தைப் பயன்படுத்தத் தவறியது போன்ற போக்குவரத்துக் குற்றங்களுக்காக கனரக வாகன ஓட்டுநர்களுக்கு 26 அபராதக் கடிதங்கள் கொடுக்கப்பட்டன.

அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமான புகையை வெளியேற்றிய கனரக வாகனம் ஒன்றுக்கு தேசியச் சுற்றுப்புற அமைப்பு அபராதக் கடிதம் கொடுத்தது. 

Top