Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கோவில்களில் ஒரு நேரத்தில் 10க்கும் குறைவான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: இந்து அறக்கட்டளை வாரியம்

கோவில்களில் ஒரு நேரத்தில் 10க்கும் குறைவான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: இந்து அறக்கட்டளை வாரியம்

வாசிப்புநேரம் -
கோவில்களில் ஒரு நேரத்தில் 10க்கும் குறைவான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: இந்து அறக்கட்டளை வாரியம்

கோப்புப் படம்: நித்திஷ் செந்தூர்

COVID-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சுகளுக்கு இடையிலான குழு வெளியிட்டிருக்கும் ஆலோசனையைத் தொடர்ந்து கோவில்களில் ஒரு நேரத்தில் 10க்கும் குறைவான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.

வாரியத்தின் கீழ் உள்ள கோவில்களில் தினப் பூஜைகள் மட்டுமே நடத்தப்படும்.

அந்த வழிபாடுகள் இணையம் வழி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் வாரியம் தெரிவித்தது.

சிறப்பு வழிபாடுகளில் 10க்கும் குறைவானவர்கள் மட்டும் தான் பங்குபெற முடியும்.

கிருமிப்பரவல் தணியும்வரை மக்கள் வீடுகளிலேயே வழிபாடுகளைச் செய்து கொள்ளும்படி வாரியம் கேட்டுக்கொண்டது.

பக்தர்கள் உடல் நலத்தின் மீது அக்கறைக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வாரியம் கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்