Images
  • youtube
    (கோப்புப் படம்: AFP/LIONEL BONAVENTURE)

சிங்கப்பூரில் படைப்புத்துறையில் முன்னேற விரும்புவோருக்கு வழிகாட்டுதல் திட்டங்கள்

சிங்கப்பூரில் படைப்புத்துறையில் முன்னேற விரும்புவோருக்குப் புதிய பயிற்சிகளும் வழிகாட்டுதல் திட்டங்களும் வழங்கப்படவுள்ளன.

தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் YouTube உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து அதற்கு ஏற்பாடு செய்கிறது.

பயிற்சிகள், வழிகாட்டுதல்கள் மூலம், படைப்புகளைப் பார்வையிடும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு வருமானத்தையும் ஈட்டமுடியும்.

VidCon ஆசிய மாநாட்டில் அது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

படைப்பு விளம்பர உத்திகள், பார்வையாளர்களின் ஈடுபாடு, தரவுப் பகுப்பாய்வு ஆகிய அம்சங்களில் திறன்களை மேம்படுத்த உதவி வழங்கப்படும்.

ஊடகத்துறைக்கு உள்ளூர்ப் படைப்புக் கலைஞர்களை ஈர்க்கவும், வெளிநாட்டுச் சந்தைகளில் அவர்களது காணொளிகளை விரிவுபடுத்தவும் அந்த வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

உலகளாவிய படைப்புப் பொருளியல், இவ்வாண்டு மட்டும், 141 பில்லியன் வெள்ளி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் ஐந்தாண்டுக்குள் அது டிரில்லியன் வெள்ளி தொழில்துறையாக உருமாறக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Top