Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிறிய, நடுத்தர நிறுவனங்கள், கூட்டுச் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும்: நிதியமைச்சர் ஹெங்

மின்னிலக்க மாற்றங்களை எதிர்கொள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள், கூட்டுச் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -
சிறிய, நடுத்தர நிறுவனங்கள், கூட்டுச் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும்: நிதியமைச்சர் ஹெங்

(படம்: சேனல் நியூஸ் ஏசியா)

மின்னிலக்க மாற்றங்களை எதிர்கொள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள், கூட்டுச் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்திருக்கிறார்.

உலகளாவிய விரிவாக்கத்திற்கும் அத்தகைய ஒத்துழைப்பு அவசியம் என்றார் அவர்.

சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழில் சபை ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற நிகழ்வில் முக்கிய உரை ஆற்றிய போது அவர் அந்தக் கருத்தை முன்வைத்தார்.

கூட்டு ஒத்துழைப்பு உணர்வை, சிங்கப்பூர் வர்த்தகங்கள் மூன்று முக்கிய குழுக்களிடம் ஊக்குவிக்க வேண்டும் என்றார் அமைச்சர்.

பல்கலைக்கழகங்கள், தொழில்துறை, அரசாங்கம் ஆகிய மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.

சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழில் சபை அதன் மின்னிலக்கத் திட்டத்தின் வழி அதிகமான நிறுவனங்களைக் கூட்டுச் செயல்பாடுகளில் ஈடுபட ஊக்குவிக்கப்போவதாக சபையின் தலைவர் ரோலண்ட் இங் தெரிவித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்