Images
  • Heng swee keat
    (படம்: Mediacorp)

நிதிச் சந்தையில் குழப்பம் நீடிப்பதன் காரணத்தை விளக்கிய நிதியமைச்சர் ஹெங்

உலகில் நிச்சயமற்ற தன்மை அதிகரிப்பாலும் வர்த்தகப் போர் மூளக்கூடும் என்ற அபாயத்தாலும் நிதிச் சந்தைகளில் குழப்பம் நீடிக்கிறது என்று நிதியமைச்சர் ஹெங் சுவீ கியெட் கூறியிருக்கிறார்.

அனைத்துலகப் பண நிதியமும், உலக வங்கியும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் வருடாந்தரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் திரு. ஹெங் இந்தோனேசியாவின் பாலித் தீவுக்குச் சென்றுள்ளார்.

மின்னிலக்கப் பொருளியல் வளர்ச்சி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அமெரிக்கா, சீனா இடையே தொடரும் வர்த்தகப் பூசல் உலகச் சந்தைகளை பாதித்துவருவதாகத் திரு. ஹெங் குறிப்பிட்டார்.

மிகப்பெரிய வர்த்தகப் போர் அபாயத்தைக் குறைக்க சிங்கப்பூர் அதன் பங்கை ஆற்றும் என்று அவர் உறுதியளித்தார்.

உலக அளவில் பொருளியல் மெதுவடைந்துள்ளதற்கு ஏற்ப, சிங்கப்பூர்த் தன்னை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், குறுகிய கால விளைவுகளைக் கண்டு அஞ்சி சிங்கப்பூர் தன்னுடைய முயற்சிகளிலிருந்து பின்வாங்கி விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.  

Top