Images
  • Heng Swee Keat Sustainable
    (படம்:  Tang See Kit/ CNA)

இயற்கைப் பேரிடர்களிலிருந்து மீளும் ஆற்றல் அவசியம்: தற்காலிகப் பிரதமர் ஹெங்

தற்காலிகப் பிரதமர் ஹெங் சுவி கியெட் (Heng Swee Keat), ஆசியாவின் வளர்ச்சியை நீடித்து நிலைக்கச் செய்யும் வழிகள் பற்றிப் பேசியிருக்கிறார்.
இயற்கைப் பேரிடர்களைச் சமாளித்து மீளும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது அத்தகைய வழிகளில் ஒன்று என்றார் அவர்.

ஆசியப் பொருளியல்களுக்கு இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் வருடாந்தர இழப்பு, 2030ஆம் ஆண்டுக்குள் 160 பில்லியன் டாலரை எட்டக் கூடுமென முன்னுரைக்கப்பட்டுள்ளதை அவர் நினைவுகூர்ந்தார்.

வேகமான வளர்ச்சியாலும் துரிதமான நகரமய௳அத்தாலும், ஆசிய நாடுகளின் பொதுச் சேவை, உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு அதிக நெருக்குதல் உருவாகும் என்பதைத் திரு. ஹெங் சுட்டினார். ஆனால், அவற்றில் புதிய வாய்ப்புகளும் உள்ளன என்றார் அவர்.

குறிப்பாக, அறிவியல், தொழில்நுட்ப அம்சங்களில் செய்யப்படும் முதலீடு, நீடித்த வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடக் கூடுமென்று தற்காலிகப் பிரதமர் ஹெங் குறிப்பிட்டார்.  

Top