Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் Hepatitis E தொற்று அதிகரிப்பு

சிங்கப்பூரில் 2012க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் Hepatitis E தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் Hepatitis E தொற்று அதிகரிப்பு

(படம்: Wikimedia Commons/Odbake)


சிங்கப்பூரில் 2012க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் Hepatitis E தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த நான்காண்டுகளில் Hepatitis E தொற்று இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளதாக மருத்துவமனையின் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2012இல் 100,000 பேருக்கு 1.7 என்ற அளவில் Hepatitis E தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

அந்த விகிதம் 2016இல் 4.1ஆக அதிகரித்தது.

55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சீன ஆடவர்கள் Hepatitis E தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிவுப்பொருளால் மாசடைந்த தண்ணீர், முறையாகச் சமைக்கப்படாத மாமிசம் போன்றவற்றை உட்கொள்வதால் Hepatitis E தொற்று பெரும்பாலும் ஏற்படுகிறது.

Hepatitis E கிருமியைச் சோதனை செய்ததில் அது சமைக்கப்படாத மூன்று பன்றி இறைச்சித் துண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே ரகத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்ததாக மருத்துவமனை கூறியுள்ளது.

Hepatitis E கல்லீரலைப் பாதிக்கும். அது பெரும்பாலும் தானாகவே உடலிலிருந்து நீங்கிவிடும்.

ஆனால் கர்ப்பிணிகள், நோய்த் தடுப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள் போன்றோருக்கு Hepatitis E தொற்று ஆபத்தை விளைவிக்கலாம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்