Images
  • Heron Bust
    (படம்: CNB) 

பாசிர் ரிஸ்ஸில் போதைப்பொருள், பாராங்கத்தி முதலியவை பறிமுதல், ஐவர் கைது


மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (பிப்ரவரி 12) மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கையில் பல்வேறு போதைப்பொருட்களும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

427 கிராம் போதைமிகு அபின், 409 கிராம் ஐஸ் போதைப்பொருள், 101 எக்ஸ்டசி மாத்திரைகள், 22 எரிமின்-5 (Erimin-5) மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு $74,000க்கு மேல் என மதிப்பிடப்படுகிறது.

400க்கும் மேற்பட்ட போதைப்புழங்கிகள் ஒரு வாரம் பயன்படுத்தும் அளவு அது.

4 பாராங்கத்திகளும் ஒரு தடியும் மீட்கப்பட்டன.

கைதுசெய்யப்பட்டவர்களில் மூவர் பாசிர் ரிஸ் டிரைவ் 1இல் உள்ள பெட்ரோல் நிலையத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள், ஒருவர் மலேசியர்.

கைதுசெய்யப்பட்ட இரு சிங்கப்பூரர்களில் ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் இரு சிங்கப்பூரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் பெண்கள்.

விசாரணைகள் தொடர்கின்றன.


 

உங்கள் கருத்து

Top