Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இனிப்புமிக்க பானங்களின் சர்க்கரை அளவைக் காட்டும் வண்ண வேறுபாடு கொண்ட முகப்புப் படங்கள் விரைவில் அறிமுகம்

நீரிழிவுக்கு எதிரான போராட்டத்தில் மற்றொரு முயற்சி !

வாசிப்புநேரம் -
இனிப்புமிக்க பானங்களின் சர்க்கரை அளவைக் காட்டும் வண்ண வேறுபாடு கொண்ட முகப்புப் படங்கள் விரைவில் அறிமுகம்

(படம்: Reuters/Mario Anzuoni)

நீரிழிவுக்கு எதிரான போராட்டத்தில் மற்றொரு முயற்சி !

சர்க்கரை அதிகம் கலந்துள்ள பானங்களின் மேல்பகுதியில் புதிய வண்ண அடையாளத்தை இடம்பெறச் செய்வது கட்டாயமாக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

உடல்நலத்துக்கு அதிகக் கேடு விளைவிக்கக்கூடிய பான வகைகளை விளம்பரம் செய்வதற்கும் இனிமேல் தடை விதிக்கப்படும். அவை, ஆகக் குறைவான சத்து கொண்டவை என்று வகைப்படுத்தப்படும்.

சிங்கப்பூரிலுள்ள எல்லா பெரிய ஊடகங்களுக்கும் அந்தத் தடை பொருந்தும்.

ஒளிபரப்பு, தாள் விளம்பரம், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எல்லாவிதமான இணைய விளம்பரத் தளங்களும் அந்தத் தடையைப் பின்பற்ற வேண்டும்.

அதன்மூலம், பயனீட்டாளர்கள் அத்தகையை விளம்பரங்களைப் பார்ப்பது பெரிதும் குறையுமென, சுகாதாரத்துக்கான மூத்த துணையமைச்சர் எட்வின் தோங் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு பானமும் அதிலுள்ள சத்துப் பொருள்களின் அடிப்படையில் தரம் பிரிக்கப்படும். அதிலுள்ள சர்க்கரை அளவு அந்தத் தரம் பிரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும். பானத்திலுள்ள கொழுப்பின் அளவும் கருத்தில் கொள்ளப்படும்.

சுவை பானங்கள், சக்தி பானங்கள், பழரசம், மால்ட் கலந்த பானங்கள், சுவையூட்டப்பட்ட பால், நுண்ணுயிர் கலந்த பால் பானம் ஆகிய எல்லாவகையான இனிப்பு பானங்களும் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப முகப்புப் படங்களைக் கொண்டிருக்கவேண்டும்.

பொட்டலமிடப்பட்ட பானங்கள் மூலமாக மட்டும் சிங்கப்பூரர்கள், ஆண்டுக்கு 1,500 தேக்கரண்டி சீனியை உட்கொள்வதாக மதிப்பிடப்படுகிறது.

புதிய அடையாள முறையின்மூலம், பயனீட்டாளர்கள் ஆரோக்கியமான பானங்களைத் தெரிவுசெய்யும் வாய்ப்பு அதிகரிக்குமென சுகாதார அமைச்சு எதிர்பார்க்கிறது.

இனிப்பு பானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும், தங்கள் உற்பத்தி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த அது உதவுமென அமைச்சு நம்புகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்