Images
  • Fines
    படம்: Channel NewsAsia 

போக்குவரத்து விதியை மீறுபவர்களுக்கு அபராதம் அதிகரிக்கிறது

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள், சைக்கிளோட்டிகளுக்கு ஏப்ரல் 1 முதல் அபராதம் அதிகரிக்கும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.

அபராதம் அதிகரித்தால், பொறுப்பற்றமுறையில் வாகனம் ஓட்டுவோரின்   எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாக அமைச்சு கூறியது.

வேகமாகவும் பாதுகாப்பற்ற முறையிலும் வாகனம் ஓட்டுபவர்களைக் முளையிலேயே தடுப்பது நோக்கம் என்றும் உள்துறை அமைச்சு தெரிவித்தது.

போக்குவரத்து விதியை மீறுபவர்களுக்கான அபராதங்கள் இதற்குமுன் 2000 ஆம் ஆண்டு மறுஆய்வு செய்யப்பட்டது.

விதிகளை மீண்டும் மீண்டும் மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்; வாகனம் உரிமம் ரத்து செய்யப்படலாம் என்றும் அமைச்சு கூறியது.

விதியை மீறும் பாதசாரிகளுக்கும் சைக்கிளோட்டிகளுக்கும் அபராதத் தொகை அதிகரிக்கப்படுகிறது. போக்குவரத்து விளக்குகளைக் கண்டுகொள்ளாமல் சாலையைக் கடப்பது போன்ற குற்றங்களுக்கு 50 வெள்ளி அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் அது 20 வெள்ளியாக இருந்தது.


Top