Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தொடக்கநிலை 3, 4 மாணவர்கள் உயர் தமிழ், உயர் மலாய் கற்றுக்கொள்ள வாய்ப்பு

தொடக்கநிலை மூன்றாம், நான்காம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், உயர் மலாய், உயர் தமிழ் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைக் கல்வியமைச்சு வழங்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

தொடக்கநிலை மூன்றாம், நான்காம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், உயர் மலாய், உயர் தமிழ் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைக் கல்வியமைச்சு வழங்கவிருக்கிறது.

தொடக்கநிலை 3 மாணவர்கள் அடுத்த ஆண்டிலிருந்து உயர் மலாயும் உயர் தமிழும் படிக்கலாம்.

தொடக்கநிலை 4 மாணவர்கள் 2023இலிருந்து அவற்றைப் படிக்கலாம்.

இன்னும் அதிகமான மாணவர்கள் சிறு வயதிலிருந்தே தங்களின் மொழி, பண்பாடு ஆகியன பற்றித் தெரிந்துகொள்ள அது வழியமைக்கும்.

Westwood தொடக்கப்பள்ளிக்குச் சென்ற இரண்டாம் கல்வி அமைச்சர் டாக்டர் முகமது Maliki Osman அது குறித்து அறிவித்தார்.

அந்தப் பள்ளியில் புதிய பாடக்கலைத் திட்டம் முன்னோடியாகச் சோதிக்கப்பட்டது.

அது மாணவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்த உதவியிருக்கிறது.

புத்தாக்கமான நடவடிக்கைகள், விளையாட்டுகள் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் இலக்கணத்தையும், வாக்கிய அமைப்பு முறைகளையும் கற்றுக்கொண்டனர்.

கடந்த ஆண்டு 35 தொடக்கப்பள்ளிகள் அந்த முன்னோடித் திட்டத்தில் பங்கேற்றன.

இவ்வாண்டு, 54 பள்ளிகள் பங்கேற்கின்றன.

தொடக்கநிலை 3, 4இல் பயிலும் மாணவர்களுக்கு உயர் சீன மொழி ஏற்கனவே பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்