Images
கோலாலம்பூர் - சிங்கப்பூர் பாதையில் உலகின் ஆக அதிகமான விமானப் போக்குவரத்து
உலகிலேயே ஆக அதிகமான போக்குவரத்து நிகழும் அனைத்துலக விமானப் பயணப் பாதையாகக் கோலாலம்பூர் - சிங்கப்பூர் பாதை விளங்குகிறது.
மார்ச் 2017க்கும் பிப்ரவரி 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் அங்கு 30,537 பயணங்கள் இடம்பெற்றதாக விமானப் போக்குவரத்து ஆலோசனை நிறுவனமான OAG கூறியது.
அந்தப் பாதையில், நேரத்தோடு செயல்படும் விமான நிறுவனங்களில் ஸ்கூட் முதலிடம் வகிக்கிறது. அந்த அம்சத்தில் ஆகக் கடைசி நிலையில் வந்துள்ளது மலேசிய ஏர்லைன்ஸ்.
ஆசியாவில் ஆக அதிகப் போக்குவரவு நிகழும் விமான நிலையமாக ஹாங்காங் விமான நிலையம் தெரிவு பெற்றது.

