Images

இந்து சமயம் பற்றி அறிந்துகொள்ள இணையம் வழி நடத்தப்படும் 10 நாள் விழா

சிங்கப்பூர்ச் சமூகத்தினரிடையே இந்து சமயத்தைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க, முதன்முறையாக விழா ஒன்று நடைபெறுகிறது.

நேற்று தொடங்கி வரும் 29ஆம் தேதி வரை நீடிக்கும் அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது இந்து நிலையம்.

அதில் மொத்தம் 23 நிகழ்ச்சிகளை இணையம் வழியாகப் பார்க்கலாம்.

'Living the Hindu Life' என்பது விழாவின் கருப்பொருள்.

மற்ற சமயத்தினர், இந்து சமயத்தைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் விழாவில் சேர்க்கப்பட்டுள்ளன.

அது குறித்து மேலும் அறிந்து வந்தது 'செய்தி'. 

Top