Images
  • hippo kutti (1)
    (படம்: REUTERS/Jorge Silva)

நீர்யானைக் குட்டிக்குப் பெயர்சூட்ட போட்டி போடும் பொதுமக்கள்

தாய்லந்து விலங்குத் தோட்டத்தின் ஆகப் புதிய குடியிருப்பாளர் ஒரு குட்டி நீர்யானை.

அக்டோபர் மாத இறுதியில் பிறந்த கொழுகொழுக் குட்டி பலரையும் சுண்டி இழுக்கிறது. பிறந்து ஒரு மாதமாகியும் நீர்யானைக்கு இன்னும் பெயர்சூட்டப்படவில்லை.

தாய்லந்தின் பிரபல உணவுப் பொருள்கள் சிலவற்றின் பெயர்களைச் சூட்டலாம் என்று அதன் பராமரிப்பாளர்கள் விரும்புகின்றனர்.

விலங்குத் தோட்டத்தின் Facebook பக்கத்தில் நீர்யானைக்குப் பெயர்சூட்ட பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.இம்மாதம் 20ஆம் தேதிக்குள் பெயர்களைச் சமர்ப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் பெயரைச் சமர்ப்பித்தவர், விலங்குத் தோட்டம் செல்ல, ஓராண்டு இலவச அனுமதியைப் பெறுவார்.

 

Top